விமான நிலைய பரிசோதனையில் மக்கள் செய்யும் மோசடி!

விமான நிலைய பரிசோதனையில் மக்கள் செய்யும் மோசடி!

Updated - Vinayak / 24-03-20

ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையில் உடல் வெப்பம் அதிகமாக இருந்து தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து தப்பிக்க பலரும் புதிய மோசடியில் ஈடுபட்டு வருவது அம்பலமாகியிருக்கிறது.

கோவை சர்வதேச விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் வந்திறங்கும் பயணிகள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதில், உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் நபர்கள், தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

ஒரு வேளை இந்த உடல் வெப்ப பரிசோதனையின் போது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதில் இருந்து தப்பிக்க, பயணிகள் பலரும், பாராசிடமால் மாத்திரைகளை முன்கூட்டியே போட்டுக்கொண்டு உடல் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது.

Share it On

Review