கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்.. மரணம் அடைவது ஏன்?

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்.. மரணம் அடைவது ஏன்?

Updated : 17-03-2020 / Vinayak

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் எப்படி உட்புகுகிறது என்னென்னமாற்றங்கள் உடலில் ஏற்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் பலவாறாக பரப்பபடுகிறது. ஆனால் உண்மையில் அச்சப்படும் அளவுக்கு கொரோனா எல்லோரையும் கொல்லாது. கொரோனா வைரஸ் உயிர்கொல்லி என்று சொன்னாலும் ஹெச்ஐவி போல் உயிர்கொல்லி நோய் அல்ல.

இது வைரஸால் ஏற்படும் நோய். இந்த கொரோனா வைரஸ் மற்ற வைரஸ்களைப்போல ஒரு வகையான வைரஸ் தான். மற்ற வைரஸ் காய்ச்சலுக்கு மருந்துகள் உள்ளது. இதற்கு இன்னமும் மருந்துகள் கண்டுபடிக்கப்படவில்லை. அதனால் தான் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுகிறது.

ஆனால் உண்மையில் கொரோனா குறித்து பயப்பபட வேண்டியதில்லை. ஏனெனில் யார் யாருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதோ, இதயநோய், நீரழிவு நோய் போன்ற பிரச்னைகள் உள்ளவர்களையே மோசமாக பாதித்துள்ளது. மற்ற யாரையும் பெரிதாக பாதிக்கவில்லை. கொரோனா வைரஸை இயற்கையாகவே உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எதிர்த்து போராடி விரட்டி விடும். அதற்கு மருத்துவர்களிடம் உரிய முறையில் சிகிச்சை பெற வேண்டும். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால் தான் கொரோனாவால் பிரச்சனையே. எனவேதோன் வயதானவர்கள், குழந்தைகள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

காய்ச்சல் ஏற்படும்

சரி கொரோனா பாதிப்பு எற்பட்டால் என்னென்ன மாற்றங்கள ஒருவரின் உடலில் ஏற்படுகிறது தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது. சீனாவின் வுகானில் 191 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் நாளில் காய்ச்சல் ஏற்படும். 3வது நாளில் இருமல், தொண்டை வறட்சி ஏற்படலாம். 80 சதவீத நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டன.

4 முதல் 9 நாட்கள் வரை
மூச்சுத்திணறல்

3 முதல் 4 நாட்களில் இந்த தொற்று நுரையீரலை தாக்கலாம். 4வது நாள் முதல் 9 வது நாள் வரை மூச்சுத்திணறல் தொடங்கலாம். 8வது நாள் முதல் 15ஆவது நாள் வரை நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, மூச்சுத்திணறல் பிரச்சனையை கடுமையாக்கும் . 14 சதவீத நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

 

8 முதல் 15 நாட்கள் வரை
ரத்தம் நஞ்சாகும்

நோய் பாதிப்பு நுரையீரலில் இருந்து ரத்தத்துககு செல்லலாம். முதல் வார இறுதியில் ரத்தம் நஞ்சாகி உயிருக்கு ஆபத்தான நிலையை எற்படுத்தும். 5 சதவீத நோயாளிகளுக்கு இந்த அறிகுறி ஏறபட்டுள்ளது. இவர்களுக்கு தான் அவசர சிகிச்சை அவசியம். கொரோனா வைரஸை சரிசெய்ய 21 நாட்கள் ஆகும்.அதற்குள் நோயாளிகள் இறக்கலாம் அல்லது குணடைந்து செல்லலாம். சிகிச்சை பலன் அளித்தால் 18 முதல் 25 நாளில் குணடைந்த நோயாளிகள் சீனாவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலே சொன்ன அறிகுறிகள் தொடங்கிய உடன் 15 முதல் 22 நாட்களில் நோயாளிகள் இறந்துள்ளார்கள்

 

Share it On

Review