தமிழகத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.!

தமிழகத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.!

Updated : 24 - 03 - 2020 /  YUVAN   

             சென்னையில் உள்ள டிஎம்எஸ் காம்ப்லெக்ஸில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஏற்கனவே 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மேலும், 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் லண்டனில் இருந்து திரும்பிய சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த இளைஞர், மற்றும் திருப்பூரை சேர்ந்த 48 வயது நபர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். மதுரையைச் சேர்ந்த 54 வயது முதியவர் ஒருவருக்கும் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், மதுரையை சேர்ந்த முதியவர், எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாமலேயே கரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Share it On

Review