கரோனா நிவாரணமாக குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

கரோனா நிவாரணமாக குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

Updated : 24 - 03 - 2020 /  YUVAN   

              இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் பழனிசாமி கரோனா நிவாரணமாக தமிழகத்தி உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவதாக அறிவித்தார். மேலும், அவர் கூறியதாவது:-

 • கரோனா:  தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா  ரூபாய் 1000 வழங்கப்படும்.
 • நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி ரூ.1000 மற்றும் கூடுதலாக ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
 • ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும்.
 • ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கப்படும்.
 • அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  மார்ச் மாத ரேசன் பொருட்களை ஏப்ரல் மாதம் பெற்றுக்கொள்ளலாம். விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும்.
 • ஆட்டோ தொழிலாளர்களுக்கு 17 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும்.
 •  ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
 • நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
 • 100 நாட்கள் வேலை திட்டத்தில் 2 நாட்கள் கூடுதல் சம்பளம் வழங்கப்படும்.
 • கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை அமலாக உள்ளதால் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
 • கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.3,250 கோடி நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Share it On

Review