தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15ஆக உயர்வு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15ஆக உயர்வு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Updated : 24 - 03 - 2020 /  YUVAN   

               தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12-ல் இருந்து 15 ஆக உயர்ந்துள்ளது. என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய 74 வயது முதியவர்,  52 வயது பெண்ணுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

             Description: C:\Users\hi\Desktop\செய்தி\update.JPG

          சுவிட்டசர்லாந்தில் இருந்து திரும்பிய 25 வயது பெண்ணுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இருந்து திரும்பிய 74 வயது முதியவர் போரூரை சேர்ந்தவர் என்பதும், 52 வயது பெண் புரசவைவாக்கத்தை சேர்ந்தவரும், சுவிட்டசர்லாந்தில் இருந்து திரும்பிய  25 வயது பெண் கீழ்கட்டளை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Share it On

Review